வடக்கில் மூவாயிரம் பேருக்கு உடனடி நியமனம் - ஆளுநர் அறிவிப்பு
வடமாகாணத்தில் மூவாயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அனைத்து வெற்றிடங்களையும் நிச்சம் நிரப்பி வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பேன் என வடக்கு மானாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்திருக்கிறார்.
குறித்த வெற்றிடங்களை நிரப்ப வடக்கு மாகாணசபை தவறிவிட்டதாகச் சாடியிருக்கும் அவர் மாகாணசபை நிரப்ப தவறிவிட்ட குறித்த நியமனங்களை தனது குறுகிய ஆட்சிக்காலத்தில் இளைஞர்களுக்கு வழங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.
எனினும் வடக்கு மாகாணசபை உருவாக்க முனைந்த நியமன காடர்களை வடக்கு மாகாண ஆளுநரும் மத்திய அரசும் இணைந்து தடுத்ததோடு இழுத்தடிப்புக்களைச் செய்துவந்ததும் குறிப்பிட்டத்தக்கது.
வடக்கு மாகாண பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநரைப் பலதடவை சந்தித்து தமது நியமனம் குறித்து கோரிக்கைகள் விடுத்தபோதும் அவற்றைக் கண்டுகோள்ளாத ஆளுநர் இப்போது வடக்கு மாகாணசபை மீது பழியினைச் சுமத்தி அரசியல் நாடகம் ஆடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Post a Comment