தயாராக இருக்கிறது மருத்துவதுறை?


கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அணர்த்தம் காரணமாக அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்கள் அனைத்திற்கும் நடமாடும் மருத்துவ சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி குமாரவேல் தெரிவித்துள்ளார்.

தற்காலிக இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடிகள் நோய் தடுப்பு , வர முன் காப்பு ஆகியவற்றின் கீழ் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் அணி இதற்காக தேர்வு செய்யப்பட்டு பணிகளை முன்னெடுக்கும். அதேவேளை நுளம்பு பெருக்கத்தை தடுப்பதற்கான மருந்து விசுறும் படிகளிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது முகாம்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேநேரம் அடுத்த கட்டமாக முகாமில் இருந்து வீடு திரும்பும் மக்களின் வீடுகளிற்கும் மருந்து விசிறுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

இதற்காக சுகாதாரத் திணைக்களத்தினால் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பும் இடம்பெறுகின்றனவெனவும் வைத்தியக் கலாநிதி குமாரவேல் தெரிவித்துள்ளார்.

No comments