கூரேயுடன் வன்னி பார்க்க சென்ற அனந்தி, சிவாஜி?
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியே முன்னணியில் நின்றுவருகின்றது.ஒருபுறம் தன்னார்வ அமைப்புக்கள்,பல்கலைக்கழக சமூகம்,மாணவர்கள் என அனைத்து தரப்புக்களும் தம்மால் இயலுமான உதவிகளை நல்கி வருகின்ற நிலையில் வடமாகாண ஆளுநரும் தற்போது வன்னி சென்றுள்ளார்.
ஏற்கனவே நாமல் ராஜபக்ஸ ஒரு சுற்று இன்று வந்து திரும்பியுள்ள நிலையில் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு பணித்துள்ளதாக வட மாகாண ஆளுநர தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிற்கு விஜயம் செய்த வடக்கு ஆளுநருடன் சுற்றி பார்க்க இன்று முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி மற்றும் சிவாஜி ஆகியோர் விஜயம் செய்திருந்ததாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment