எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காய் தூதரகங்களுக்கு கடிதமனுப்பும் கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காகத் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன,

“எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா சபை ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் அரசதரப்புடன், எதிர்க்கட்சி இணைந்து செயற்பட்டால் தான், புதிய அரசியலமைப்பு வரைவுக்கு அங்கீகாரத்தை பெற முடியும் என்று நினைக்கிறது கூட்டமைப்பு.

ஆனால், மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி வலுவானது. தீங்கு விளைவிக்கும் பிரிவுகளை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை அது அனுமதிக்காது.” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments