அரசியல் கைதிகள் விவகாரம் - கூட்டமைப்புடன் மைத்திரி இன்று மாலை சந்திப்பு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்­கும், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக் ­கும் இடை­யில் இன்று மாலை 4 மணிக்கு சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.
இந்­தச் சந்­திப்­பில் தமிழ் அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடை­யில் கடந்த வெள்­ளிக் கிழமை இரவு சந்­திப்பு நடை­பெற்­றது.
தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் கூட்­ட­மைப்­பால் சந்­திப்­பின்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இதன்­போது ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் திங்­கட்கிழமை (இன்று) சட்­டமா அதி­பர் மற்­றும் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரு­டன் பேச்சு நடத்த இருப்­ப­தா­க­வும் அதில் கலந்து கொள்­ளு­மா­றும் அழைப்பு விடுத்­தி­ருந்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இன்­றைய சந்­திப்­பில் பங்­கேற்­க­வுள்­ள­னர்.

No comments