வைத்தியசாலையிலிருந்த வீடு திரும்பிய சம்பந்தன் எம்.பிக்களுடன் சந்திப்பு

உடல்நலக் குறைவால் கடந்த இரு தினங்களாக கொழும்பு ‘லங்கா’ (அப்பலோ) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று வீடு திரும்பினார்.

கொழும்பிலுள்ள தனது வீட்டில் தங்கியிருக்கும் அவர், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார்.

நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதால் அதற்கு முன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் பேசவுள்ளார்.

No comments