24 மணித்தியாலத்துள் நடவடிக்கை - சம்பந்தனிடம் மைத்திரி வாக்குறுதி

நாட்டில் பிரதமரும் இல்லை அரசும் இல்லை. அடுத்த 24 மணித்தியாலயங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை இன்று மாலை சந்தித்தார். அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கீச்சகத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

“மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளையை அடுத்து நாட்டில் பிரதமர் எவரும் இல்லை. எந்த அரசும் இல்லை. அதனால் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் உரிய நடவடிக்கையை எடுப்பேன்.
பாதுகாப்புச் சபை மற்றும் உரிய தரப்புனருடன் அவசரமாக இது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீச்சகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments