அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தோற்கடிப்போம் - ஐ.ம.சு.மு


வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தமது கட்சி தோற்கடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

”நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலான எந்தவொரு திட்டமும், நாடாளுமன்றத்தில் தடுக்கப்படும்.

இந்த விடயத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தீவிர கரிசனை கொண்டுள்ளார்.

அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்த வரைவும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதுதொடர்பான எந்தக் கலந்துரையாடல்களிலும் நாங்கள் பங்கேற்கவில்லை.

அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம், சமஷ்டி அரசைஉருவாக்கும் நோக்கம் கொண்ட இனவாத அரசியல்வாதிகளின் அறிக்கைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீவிர கவனம் செலுத்தி வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments