சுதந்திரக் கட்சியில் சிலர் ஐதேகவுடன் இணைவு


ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கி்ரமசிங்க தலைமையில் கூடிய ஆராய்ந்தனர்.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளாத,  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று, ஐதேமு அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை எதிர்கால அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதானால், குறிப்பிட்ட நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐதேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments