சிறைச்சாலை வாகனத்தில் 4 மணி நேரம் காத்திருந்த கூட்டுப்படைப் பிரதானி


முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன நேற்று கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் 4 மணிநேரம் சிறைச்சாலை பஸ்ஸில் காத்துக் கிடந்துள்ளார்.

காலை 10.30 மணியளவில் சிறைச்சாலை பஸ் மூலம் கோட்டை நீதவான் வளாகத்துக்கு அழைத்து வரப்பட்ட ரவீந்திரவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை பஸ்ஸிலேயே காத்துக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதற்கமைய பிற்பகல் 2.10 மணியளவில் அட்மிரல் ரவீந்திரவை சிறைச்சாலை அதிகாரிகள்  நீதிமன்றுக்குள் அழைத்துச் சென்றதுடன், தற்போது ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு, பாதுகாப்பு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே அட்மிரல் ரவீந்திர விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

#Admiral Ravindra Chandrasiri Wijegunaratne

No comments