அறிக்கைகளால் நிரம்பி வழியும் வன்னி மக்கள் வயிறுகள்!


வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாராம்.

இதன்படி சீரற்ற காலநிலையால் வீடுகளை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக சீருடைகள் மற்றும் பாதணிகளை பெற்றுக்கொள்ளும் வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் பாடப்புத்தகங்கள் சேதமடைந்திருந்தால் அதற்கு பதிலாக புதியு புத்தகங்களை வழங்குவதற்கும் செயற்படுமாறு கல்வியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாம்.
மறுபுறம் அண்மைய வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய்கள் வடபுலத்தினை மோசமாக தாக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்த ஆண்டில் ஆயிரத்து 448பேர் டெங்கு நோயாளர்களென இனம்காணப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் து.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில்; கடந்தவாரம் நிலவிய மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்பட்ட நுளம்பு பெருக்கம் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் காய்;ச்சல் காரணமாக அதிகமானோர் குறுகிய காலத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த வகையில் தற்போது நிலவும் மழையின் காரணமாக மேலும் நுளம்பு பெருக்கம் ஏற்பட்டால் இந்த நிலமை நீடிக்கும் என்றே கருதப்படுகின்றது. இதனால் இதற்கான சிகிச்சை ஏற்பாட்டிற்கு நாம் தயார் செய்தாலும் தடுப்பு முறைகளை மக்களும் கருத்தில்கொள்வதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும். எனவும் தெரிவித்துள்ளார்.


No comments