நல்லூர் பிரதேச சபை தவிசாளருக்கு பாதீடு என்றால் என்னவெனத் தெரியாதாம்

பாதீடு என்ற பெயரில் மக்கள் நல திட்டங்கள் எதுவுமில்லாத, பாதீட்டு நியமங்கள் இல்லாத ஒரு அறிக்கையை நல்லூர் பிரதேச சபை நிறைவேற்றியுள்ளது. அதனால் நல்லூர் பிரதேசசபைக்குள் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேசசபை உறுப்பி னர்கள் குறித்த அறிக்கையை தாம் நிராகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போ து மேலும் அவர்கள் கூறுகையில், இன்று 2019ம் ஆண்டுக்கான நல்லூர் பிரதேசசபையின் பாதீடு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட சாதாரண அறிக்கையில்

மக்களுடைய நலன்சார்ந்த திட்டங்கள் எவையும் இல்லை. அதில் தவிசாளரால் சபையில் கொ ண்டுவரப்பட்ட பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விடயங்கள் மட்டுமே இருக்கின்றது. மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதுவும் அதில் இல்லை என்பதுடன்,

மக்களுக்கு புரியாத பல விடயங்களை கொண்ட சாதாரண அறிக்கையாகும். இதனை நாங்கள் சபையில் சுட்டிக்காட்டியபோது சபையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அதாவது நாங்கள் மக்களுடைய நலன்களை குழப்புவதாகவும், நாங்கள் பிரதேச சபையில் அர சியல் செய்வதாகவும் கூறுகிறார்கள். இதே தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பான தவிசாளர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வந்தால்

தான் மின் விளக்கு பொருத்தமாட்டேன் என கூறிக் கொண்டு இன்றுவரை கிராமம் ஒன்றுக்கு மின் விளக்கு பொருத்தாமல் விட்டிருக்கின்றார். மேலும் தாங்கள் செய்வதற்கெல்லாம் நாங்கள் பெயர் எடுக்கிறோம் எனவும் கூறுகிறார்.

இங்கே நாங்கள் செய்வது அரசியலா? தவிசாளர் செய்வது அரசியலா? நாங்கள் ஒன்றுக்கு பல தடவைகள் கூறினோம் மக்கள் நலன்சார் திட்டங்கள் அடங்கியதாக பாதீட்டுக்குரிய நியமங்களுட ன் பாதீட்டை தயாரியுங்கள் என.

ஆனால் அந்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டு தாங்கள் விரும்பியவாறு மக்கள் நல திட்டங்கள் எதுவும் இல்லாத ஒரு அறிக்கையை 2019ம் ஆண்டுக்கான பாதீடு என கூறி நிறைவேற்றியி ருக்கின்றார்கள்.

அந்த அறிக் கையில் 1,2,3,4 என இலக்கமிடப்பட்டு ஏதோ விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றது. அந்த இலக்கங் கள் இடப்பட்டு கூறப்பட்டுள்ள விடயம் என்ன? என ஆழுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி கேட்டால் ஒருவருக்குமே தெரியாது.

எல்லோரும் சiபியல் அமைதியாக இருந்தார்கள். தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக் கொண்டு என்ன இருக்கிறது? என்ன சொல்லப்பட்டிருக்கின்றது? அல்லது என்ன செய்யப்போ கிறார்கள்? என்பது கூட தெரியாமல் ஆழுங்கட்சி உறுப்பினர்கள்

அந்த சாதாரண அறிக்கைக்கு ஆதரவளித்து அதனை பாதீடு என கூறி நிறைவேற்றியிருக்கின் றார். இதனை அறியாமல் அவர்கள் செய்யவில்லை. நாங்களே பல தடவைகள் கூறினோம் மக்கள் நல திட்டங்கள் எவையும் இல்லை.

ஆகவே உரிய நியமங்களுடன் மக்கள் நல திட்டங்களை உள்ளடக்கி செய்யுங்கள் என, ஆனால் அதை அவர்கள் கேட்பதற்கு தயாராக இல்லை. மாறாக எங்களை குழப்பவாதிகள் என்றும், அரசியல் நடத்துகிறோம் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் பாதீடு என்ற பெயரில் அவர்கள் கொண்டுவந்த சாதாரண அறிக்கையில் உதாரணமாக ம ரநடுகை திட்டம் என ஒரு திட்டத்தை போட்டிருக்கின்றார்கள் என்றால் 7 லட்சம் ரூபாய்க்கு மரம் நடுவதற்கு நிர்வாக செலவு 5 லட்சம் ரூபாய் காட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு நிர்வாக செலவு காட் டப்படலாமா? இப்படி பல இடங்களில் ஒரு செயற்றிட்டத்தின் அiவாசியளவு நிதி நிர்வாக செலவுக்கு காட்டப்பட்டிருக்கின்றது. எனவே நல்லூர் பிரதேச சபையின் ஆழுங்கட்சி மக்களுடைய நலன்களை அடிப்படையாக கொண்டு இயங்கவில்லை.

எனவே நாங்கள் அதனை எதிர்த்திருக்கின்றோம். அவர்களுடைய செயற்பாடுகளை கண்டித்திருக் கிறோம். இதற்குமேல் மக்கள் சிந்தித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

No comments