ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களே இல்லையா ?

ஐக்கியதேசிய கட்சி தலமையிலான புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங் க பதவியேற்றிருக்கும் நிலையில் ரணிலை தவிர அந்த அமைச்சு பதவியை பெறக்கூடிய ஒருவர் இல்லையா? என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விசனம் தெரிவித்துள்ளார்.

இதில் தேசிய கொள்கை பொருளாதார தொழில் பயிற்சி மீள்குடியேற்றம்இ வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த அமைச்சு பதவி தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ இளைஞர் விவகாரத்தை பார்க்க ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களே இல்லையா என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களாக அமைச்சரவையை நியமிப்பதை விடுத்து தமது கட்சி உறுப்புரிமை பற்றி பேசி ஐக்கிய தேசிய கட்சியினர் கால விரயம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்

No comments