மன்னார் மனிதப் புதைகுழியை ஐ.நா பொறுப்பெடுக்க வேண்டும் - ஆர்ப்பாட்டம்


மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை ஐ.நா பொறுப்பேற்க வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.



வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

வட – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு மகஜரொன்றை அனுப்பி வைப்பதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, உரியமுறையில் பாதுகாக்கப்பட்டு மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்பதற்கான நம்பிக்கை இல்லை என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



எனவே, ஐ.நா செயலாளர் நாயகம், இந்த மனித எச்சங்களைப் பாதுகாத்து மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments