புத்தாண்டுக்குப் பின் ‘ஒப்பரேசன் – 02’ இற்குத் தயாராகும் மைத்திரி

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகள் தணிந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

தேசிய  மட்டத்திலான தேர்தல் ஒன்றை இலக்கு வைத்து ஜனாதிபதி செயற்பாடுகள் அமைந்துள்ளன என்று கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம், மீளமைப்பு நடவடிக்கைகள் என்பன குறித்து ஆராயப்பட்டன.

கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு சகல தொகுதி அமைப்பாளர்களினதும் ஒத்தழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களுக்காக அதனை தயார்படுத்த தொகுதி தலைமைத்துவங்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி தனிப்பட்ட பயணமாக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளார். நாடு திரும்பிய பின்னர்  அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார்  என  எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments