சந்திரிக்காவும் இல்லை மகிந்தவும் இல்லை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டத்துக்கு கட்சியின் காப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

நேற்றைய கூட்டத்தில் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவில்லை. இதுகுறித்து கூட்டத்துக்குப் பின்னர், சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பியதாசவிடம், செய்தியாளர்கள், கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ”சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஏனென்றால் அவர் கடந்த சில மாதங்களால் எந்தக் கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தக் கூட்டத்தில் கட்சியின் மற்றொரு காப்பாளரான முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண பங்கேற்றிருந்தார்.

எனினும், சுதந்திரக் கட்சியின் காப்பாளரான மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை.

தான் சுதந்திரக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் என்றும், கட்சியின் காப்பாளராக இருக்கிறேன் என்றும் அவர் சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு செவ்வியளித்திருந்த போதும், கட்சி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments