தோல்வி பயம் இல்லை என்றால் தேர்தலை நடத்துங்கள்

“தோல்வியை எதிர்நோக்க இயலாமை காரணமாக சிலர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராகச் செயற்படுகின்றனர்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று ஹங்கம பிரதேசத்தில் மத வழிபாட்டுக்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ எம்.பி., அங்கு மேலும் கூறியதாவது:-

“நாட்டில் மீன்பிடித்துறை உள்ளிட்ட அனைத்துப் வியாபாரங்களும் வீழ்ச்சியடைந்து இருக்கும் அதேவேளையில் கொலைகள் மற்றும் பாதாளக் கோஷ்டிகளின் நடமாட்டம் கூடுதலாக உள்ளது.

இந்த அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்துமா அல்லது மாகாண சபைத் தேர்தலை நடத்துமா என்று சொல்லத் தெரியாது.

ஆனால், நாம் நாடாளுமன்றத் தேர்தலைத்தான் விரும்புகின்றோம். தேர்தலை எதிர்நோக்கப் பயந்திருக்கும் சிலர் அதற்கு எதிராகச் செயற்படுகின்றனர்.

துணிவிருந்தால் பொதுத் தேர்தலை நடத்திக் காட்டுமாறு அவர்களுக்கு (ரணில் அரசு) நாம் சவால் விடுகின்றோம்” – என்றார்.

No comments