கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகள்: பறக்கின்ற கோப்பைகள்?


கூட்டமைப்பின் வசமுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் உள்வீட்டு குடுமிப்பிடிகள் உச்சம் பெற்றுள்ளது.இன்று நகரசபையின் கூட்டமைப்பின் தவிசாளருக்கும் பிரதி தவிசாளருக்குமிடையே மூண்ட மோதலில் உறுப்பினர்கள் அருந்த வைத்திருந்த தேனீர் கோப்பைகள் பறந்துள்ளன.அத்துடன் கையளிக்கப்பட்ட அலுவலக ஆவணங்களும் காற்றில் பறக்க வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் வெளியே வா உனக்கு கவனிப்பு இருக்கின்றதென்ற அன்பு எச்சரிக்கையுடன் வெளிநடப்பும் செய்துள்ளார் பிரதி தவிசாளர்.

கூட்டமைப்பின் கே.சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளரான ஒருவர் அவரது சிபார்சுடன் தவிசாளராக்கப்பட்டுள்ள போதும் தவிசாளரை ஏனையோர் மதிப்பதில்லை.

இந்நிலையில் சபை அமர்வு கூடுகின்ற போதெல்லாம் குழப்பங்கள் ஏற்படுவது வழமையாகும்.

இன்றும் அவ்வாறான வாக்குவாதத்தில் பிரதி தவிசாளரது கைங்கரியத்திலேயே தேனீர் கோப்பைகள் பறந்துள்ளன.அத்துடன் தவிசாளரிற்கு வெளியே வந்தால் கவனிப்பென்ற மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கூட்டமைப்பின் வனமுள்ள கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர் மதுபோதையில் கடமைகளை தடுத்ததாக விசாரணைகளிற்குள்ளாகியுள்ளார். 

No comments