இறுகுகின்றது கேப்பாபுலவு போராட்டம்?


தமது காணிகளை விடுவிக்க கோரும் கேப்பாபிலவு மக்களது முற்றுகைப்போராட்டம் முல்லைதீவு இராணுவ கட்டமைப்பு தலைமயகம் முன்பதாக இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.தமது சொந்த காணிகளிற்கு விடாவிடின் நாளை தாங்களாகவே காணிகளிற்குள் புகப்போவதாக அறிவித்து நேற்று கடிதங்களை அவர்கள் அனுப்பியிருந்தனர்.இதன் தொடர்ச்சியாக முகாம் வாசலில் தமது போராட்டத்தை துரிதப்படுத்தியுள்ளனர்.படையினரால் தமக்கேதும் ஏற்படுமிடத்து அதற்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வடக்கில், பாதுகாப்பு படையினர் வசமிருக்கும் காணிகளில், 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும் அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி டிசெம்பர் 31ம் திகதியினுள் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுமென அறிவித்திருந்தார்.ஆனால் அவ்வாறு விடுவிக்கப்படாத நிலையில் படைத்தலைமையகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் விடுவிக்கப்படும் அதேவேளை, அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும். 

இந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினாரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் விடுவிக்கப்படும் அதேவேளை, அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும். 
மன்னார் மாவட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லான்குளம் கிராம சேவகர் பிரிவின் கீழ், 500 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று இலங்கை தரைப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனினும் மக்கள் உள்நுழையவுள்ளதாக அறிவித்துள்ள கேப்பாபுலவு விடுவிப்பு பற்றி ஏதும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.





No comments