பதவி விலகினார் அமெரிக்க இராணுவ அமைச்சர்!

அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் குறித்த டிரம்புக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் சரியான தருணம் இது தகுதியான ஒரு தலைவரை ராணுவ மந்திரியாக நியமிப்பதற்கு ஏதுவாக பதவி விலகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், இந்த இடைப்பட்ட காலம் புதிய மந்திரியை தேர்வு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறுநாளே இராணுவ மந்திரி பதவியில் இருந்து ஜிம் மேட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். எனவே, டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜிம் மேட்டிஸ் ராஜினாமா கடிதம் அனுப்பியதையடுத்து, பிப்ரவரி மாதம் அவர் ஓய்வு பெற உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஜிம் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது பதவிக்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் பாராட்டியுள்ளார்.

#Jim Mattis

No comments