ரணிலுக்கு சாவு மணி அடிக்கத் தயாராகிறது ஜேவிபி


ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

‘‘ ரணிலை பாதுகாப்பதோ அல்லது அரசை பாதுகாப்பதோ எமது நோக்கம் அல்ல. ஜனநாயகத்துக்காகவே நாம் போராடுகின்றோம். எனவே, எமது நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பதை 12 ஆம் திகதி நேரில் பார்க்கலாம்” என்று ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரட்னாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் பெலவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் 12ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்படவுள்ள மேற்படி பிரேரணை தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே பிமல் ரட்னாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

No comments