தென்னைமரவடிக்கும் வேகமாக புத்தர் வருகின்றார்!


திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக மண்ணான தென்னைமரவடி கிராமத்தை முற்றாக சுவீகரம் செய்யும் இலங்கை அரசின் முயற்சி மும்முரமடைந்துள்ளது. தென்னைமரவடி கந்தசாமி மலை மீது மக்களால் வணங்கப்பட்டு வந்த முருகன் ஆலய அடையாளங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு அங்கு தமிழர்கள் யாரும் செல்லக்கூடாது என்று தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிமறித்து புதிய கட்டடம் ஒன்றிற்கான அத்திவாரம் போடப்பட்டுள்ளது. அயற்கிராமத்திலுள்ள சிங்கள ஊர்காவற் படையினரே அப்பகுதியில் கட்டட வேலையை மேற்கொள்வதாக பூர்வீக தமிழ் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

முல்லைதீவிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் நுழைவாயிலாக அமைந்துள்ள தென்னைமரவடி கிராமத்தில் படைமுகாம்கள் பல அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக தெரிவித்து தமிழ் மக்கள் செல்ல தொல்லியல் திணைக்களம் தடை விதித்துமுள்ளது.

அவ்வாறு தமிழ் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டு சிங்கள விகாரைக்கென கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments