பருத்தித்துறையில் 20 வர்த்தகர்களுக்கு நீதிமன்று தண்டம்

பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நியதி சட்டத்தினை மீறி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியல் இன்றி பொருட்களை காட்சிப்படுத்திய 20 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு 89 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி.

குறித்த தண்டப்பாணம் கடந்த வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவணையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் புலணாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடிர் சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த வாரம் பருத்தித்துறை நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை மற்றும் நிஜய அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்யாமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் குறித்த வர்த்தக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் மன்றில் வாசித்து காட்டப்பட்டது.

குற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து அபராதம் விதித்தார் நீதிவான்.

No comments