வெள்ள அனர்த்தம் - 2 ஆயிரத்து 788 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 161 பேர் பாதிப்பு

வடக்கில் கடந்த 48 மணிநேரமாக நீடிக்கும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடரால் 2 ஆயிரத்து 788 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அவர்களில் ஆயிரத்து 829 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 775 பேர் இடர்பெயர்ந்து 40 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை 3 மணிவரையான நிலவரப்படி வடக்கில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டோரின் விவரத்தை இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 675 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 170 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 614 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 899 பேர் இடர்பெயர்ந்து 16 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 498 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 451 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 250 பேர் இடம்பெயர்ந்து 4 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 352 பேர் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி
கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 550 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 858 பேர் 7 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் ஒரு வீடு முழுமையாகவும் ஒரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 629 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 119 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 7 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வெள்ளத்தால் ஒரு வீடு முழுமையாகவும் ஒரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பச்சிளைப்பளை பிரதேச செயலர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 3 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்


மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்.

No comments