மலையக இளைஞர்களின் உணவு ஒறுப்புப் போராட்டம் நிபந்தனையுடன் இடைநிறுத்தம்



மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை வேதனம் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் இளைஞர்கள் முன்னெடுத்து வந்த உணவு ஒறுப்புப் போராட்டமானது இன்று மாலை இடைநிறுத்தப்பட்டது.

 பெருந் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக் கோரி மலையக இளைஞர்கள் நால்வர் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
கணேசன் உதயக்குமார், கந்தையா அசோக் குமார், கனகரத்தினம் ராஜா மற்றும் வீரக்குமார் மனோச் ஆகிய நான்கு மலையக இளைஞர்களுமே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஐந்தாவது நாளான இன்று உணவு ஒறுப்புப் போராட்டத்தில் பங்கேற்று நூற்றுக் கணக்கானோர் ஆதரவளித்தனர். அத்துடன், இன்று மாலை நிபந்தனைகளுடன் உணவு ஒறுப்புப் போராட்டத்தை நான்கு இளைஞர்களுடன் இடைநிறுத்தினர்.

எமது மக்களுக்கு 1000 ரூபாவை நாளாந்த சம்பளமாக வழங்காத பட்சத்தில் மீண்டும் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த இளைஞர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

No comments