பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

தமிழீழ மண்மீட்புப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்பத்தினரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி  நவம்பர் 24 ஆம் நாள் சனிக்கிழமை  பிரித்தானியாவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தென்மேற்கு லண்டனில், இலுள்ள Sutton  Thomas wall Center all இலும், வடமேற்கு லண்டனில் South Harrow, Malvern Avenue இலுள்ள St Andrew Church Hall இலும் நடைபெற்றது.

மாலை 7.30 மணியளவில் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளித்தல் நிகழ்ச்சி ஆரம்பமானது.

Harrow பகுதியில் 

பொதுச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களின் தந்தையர் யோகராசா அவர்கள் ஏற்றிவைத்தார்
தமிழீழ தேசிய கொடியினை பாலகுமார் வசந்தகுமார் என்று அறியப்படும் மனோஜ் அவர்களின்சகோதரனும் வடமேற்கு மாவீரர்பணிமனை பொறுப்பாளருமான கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்

அகவணக்கத்தை தொடர்ந்து ஈகைச்சுடரினை 1995 வைகாசி மாதத்தில் வளவாய் பகுதியில் தகவல் திரட்டும் பணியில் வீரகாவியம் ஆகிய அவர்களின் சகோதரி ஜெயகலா ஏற்றி வைத்தார்கள்

கல்லறைக்கான மலர்மாலையினை லெப்டினன் கேணல் கடற்கரும்புலி நளாயினி அவர்களின் சகோதரி ஆனந்தி அணிவித்து வைத்ததை தொடர்ந்து பொதுமக்கள் வணக்கம் செலுத்தினார்கள் .

சமநேரத்தில்  sutton பகுதியில்

பொதுச்சுடரினை பூநகரியில் வீராகவியமாகிய ஜெகதீசனின் தாயார் பாக்கியசெல்வம் மகேந்திர ராசா  அவர்கள் ஏற்றிவைத்தார்
தமிழீழ தேசிய கொடியினை  தென்மேற்கு லண்டன்  பொறுப்பாளருமான நமசிவாயம் வசந்தகுமார் அவர்கள்  ஏற்றிவைத்தார்

அகவணக்கத்தை தொடர்ந்து ஈகைச்சுடரினை ஆனையிறவு சமரில் வீராகவியமாகிய லெப்டினன் அன்பன் மாஸ்டரின் தயார் திருமதி குமுதா முருகராசா ஏற்றிவைத்தார்

கல்லறைக்கான மலர்மாலையினை  2008 ல் மணலாற்றில் வீரரசவடைந்த கட்டளை தளபதி வைகுந்தன்  - சித்தா அவர்களின் தந்தை திரு மனோகரசா கந்தசாமி அணிவித்தார்.

எழுச்சி கானங்கள் , கவிதைகள் மற்றும்  நினைவுரையை தொடர்ந்து மாவீரர் பெற்றோர்களுக்கு இலட்சனை   அணிவித்து கௌரவிப்பு நிகழ்வானது இடம்பெற்றது.

தொடர்ந்து விருந்துபசாரத்தோடும் உறுதிமொழியோடும் நிகழ்வானது நிறைவு பெற்றது.










No comments