கஜா புயல் வடக்கின் கரை நோக்கி வருகின்றது?



கஜா புயலிலின் தாக்கம் தொடர்பில் யாழ்.குடாநாடு உறைந்து போயுள்ள நிலையில் அது கரையைக் கடக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில சமயம் இலங்கையின் வடக்கு மாகாண கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கக் கூடும். புதிய செய்மதிப்படங்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே உள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதிபராஜா எச்சரித்துள்ளார்.

கஜா புயல் இன்று பின்னிரவு வடக்கு கரையைக் கடக்கலாம். கனமழையுடன் காற்றின் வேகமும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு கரையோர மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே யாழ்.மாவட்டத்தில் அரச அலுவலகங்கள் ,பாடசாலைகள் மதியத்துடன் முடங்கிப்போனது.மக்கள் நடமாட்டமின்றி மாலைவேளையுடனேயே வீதிகளும் வெறிச்சோடிக்காணப்பட்டது.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் எவருமே தொழிலுக்கு செல்லவில்லை.அவர்களை தொழிலுக்கு செல்லவேண்டாமென இன்று முழுநாளும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டவண்ணமிருந்தது.

அதேவேளை கரையோரப்பகுதிகளில் தொடர்ந்தும் அச்சமான சூழல் நீடிக்கின்றது.அதிலும் குறிப்பாக யாழ்.குடாநாடு முழுவதும் மந்தமான சூழல் இரவு முழுவதும் நீடிக்கின்றது.  

No comments