உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு விழா

நாளை ( 22.11.2018, வியாழன்)  மாலை 5.00 மணி அளவில் சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண அரங்கில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய ”தமிழன் எதிரி தமிழன்” பெண்பா ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. பழ நெடுமாறன் அவர்களின் தலைமையில் நடந்தேறும் இவ்விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் திரு. வைகோ அவர்கள் நூல் வெளியீட்டு சிறப்புரை யாற்றுகிறார்கள்.

இயக்குநர் புகழேந்தி தங்கராசு, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், இயக்குநர் கெளதமன், வழக்கறிஞர் த. பானுமதி, எழுத்தாளர் சூரிய தீபன் (பா. செயப்பிரகாசம் உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகிறார்கள்.

தமிழின உணர்வாளர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்யுமாறு தோழமையோடு அழைக்கின்றோம்

இவண் : இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையம்

தொடர்புக்கு 9444615410

#Kasi Ananthan #Vaiko #NedumaranNo comments