கோப்பாய்க்கு தடையாம்: வருவாரா சுமந்திரன்!


கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்னதாக மாவீரர்நாளுக்கு தடைகோரி மனுவொன்றை யாழ் நீதிமன்றில் கோப்பாய் காவல்துறை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் இதன் பின்னணியில் தமிழரசுக்கட்சியும் சுமந்திரன் அணியினது பின்னணியுமிருக்கலாமென மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

வலிகாமத்திற்கான மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த கோப்பாய் தரவை தற்போது இலங்கை இராணுவத்தின் 512வது படையணியின் தலைமை முகாமாக உள்ளது.
1996ம் ஆண்டில் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக இடித்தழிக்கப்பட்ட போதும் 2002ம் ஆண்டின் சமாதான காலத்தில் மீளக்கட்டியெழுப்பப்பட்டது.

இந்நிலையில் அது 2008 ம் ஆண்டில் மீள இடித்தழிக்கப்பட்டு தற்போதுள்ள படை தளம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டினில் படைத்தள நுழைவாயிலில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இம்முறை காவல்துறை தடை உத்தரவு கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னதாக திலீபன் நினைவு நாளில் இதே போன்று நல்லூர் தூபியில் நினைவேந்தலிற்கு காவல்துறை தடை உத்தரவு பெற நீதிமன்றினை நாடியிருந்தது.கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலில் இத்தடை பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழக்கில் தானாக முன்வந்து வெட்டியாடியிருந்தார்.எனினும் அவரது கோரிக்கையிலேயே தடை அனுமதிக்கான முயற்சிகள் நடந்ததாகவும் இறுதியில் தான் தலையிட்டு வென்றது போன்ற நாடக அரங்கேற்றம் நடந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது கோப்பாய் துயிலுமில்ல தடை விவகாரம் வந்து சேர்ந்துள்ளது.

No comments