மாவீரர் நினைவு கலைத்திறன் போட்டிகள் பிரான்சில் ஆரம்பம்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் - 2018 சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன.
கடந்த (04.11.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் பாரிசின் புறநகர்ப்பகுதியான செல் பகுதியில் தனிநடிப்பு, கட்டுரை, கவிதை ஆகியபோட்டிகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் ஈகைச்சுடரினை 25.10.2007 அன்று குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நித்திலனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
தனிநடிப்பில் கடந்த ஆண்டுகளை விட இம்முறை அதிகமாணவர்கள் பங்குபற்றியிருப்பதாகவும் - ஓவியப்போட்டியிலும் அதிகமாணவர்கள் பங்குபற்றியிருப்பதாகவும் - எதிர்வரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் மாவீரர் நினைவு சுமந்த பேச்சு, பாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் - ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments