மஹிந்த கூட்டுடன் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி!


விரைந்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவதுடன் மஹிந்த கூட்டில் அதனை எதிர்கொள்ளவும் மைத்தரி தயாராகியுள்ளார்.இதனிடையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் இரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்தே அந்த பேச்சில் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்குள்ள ஒரே மார்க்கமாக தேர்தலே உள்ளது. நாடாளுமன்றத்தை நான் கலைத்தது பிழையென ஐதேகவினரும் மற்ற கட்சிக்காரர்களும் சொல்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்த முடியுமா என்றும் சவால் விட்டுள்ளார்கள்.
நாடாளுமன்றத்தை கலைத்த எனது முடிவின் மக்கள் கருத்தறியும் விதமாக ஜனாதிபதி தேர்தலையும் சேர்த்தே நடத்த விரும்புகிறேன். அதற்கு வாய்ப்புள்ளதா?“ என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி அப்பிராயம் கோரியுள்ளார்.

இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த சட்டரீதியாக எந்த தடையும் இல்லையென்பதை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின் படி தற்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே, நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை. ஆனால், இரண்டு தேர்தல்களையும் சேர்த்தே நடத்துவதென்றால், அதிகளவான ஆளணி தேவையாக இருக்குமென்று ஆணைக்குழு குறிப்பிட்டது.

இரண்டு தேர்தல்களையும் சமநேரத்தில் நடத்துவதெனில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமென இந்த சந்திப்பில் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இது குறித்து விரைவில் ஒரு முடிவை எடுத்து விட்டு, அடுத்த வாரமளவில் மீண்டும் ஆணைக்குழு உறுப்பினர்கள் அல்லது ஆணைக்குழுவின் தலைவருடன் சந்திப்பு நடத்த விரும்பவதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

No comments