இடைக்கால நிர்வாகம்:பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை

சமாதானமான முறையில் தேர்தல் ஒன்றை நடாத்துவதை நோக்காக் கொண்டு அறிவுபூர்வமாகவும், புரிந்துணர்வுடனும் செயலாற்றக் கூடிய ஒரு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் புத்தசாசன பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்பொழுது ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்ற உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த தேர்தலை நோக்கி செல்லும் வரையில் பொது மக்களின் உணர்வுகளை மதித்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை வென்ற இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் அவசியமான ஒன்று எனவும் அப்பணிக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஒன்றுக்கு செல்வதே மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும். அதுவல்லாது, தொடர்ந்தும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதனால் மீண்டும் மீண்டும் நெருக்கடி நிலைமைதான் உருவாகின்றது.
இதனால், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பாராளுமன்ற அமர்வுகளை நடாத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சியம் பீடத்தின் மல்வத்து பிரிவு, அஸ்கிரி பிரிவு , அமரபுர பீடம் மற்றும் ராமங்ஞ்ஞா பீடம் ஆகிய பீடங்களின் மகாநாயக்கர்களின் நிறைவேற்றுக் குழு மற்றும் திவியாகஹ யசஸ்ஸி தேரர் ஆகியோரை உள்ளடக்கிய புத்தசாசன பணிக்குழுவே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது

No comments