அறிக்கை கோரும் ஆணைக்குழு?


கொழும்பில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் மற்றும் தமிழ் இளைஞர்கள் கடத்தலுடன் தொடர்புபட்ட விசாரணைகளை முன்னெடுத்து வந்த  குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இடமாற்றப்பட்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.இதனிடையே இது தொடர்பில், அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு, பொலிஸ்மா அதிபரிடம் பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரியால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட மேன்முறையீட்டை கவனத்தில் எடுத்தே, பொலிஸ் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நிஷாந்த சில்வா உடன் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ்மா அதிபரால் நீர்கொழும்பு பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments