நாடாளுமன்றமும் ஒத்திவைப்பு: விகாரையும் ஒத்திவைப்பு!


இலங்கை நாடாளுமன்றம் கூடுவதும் ஒத்தி வைக்கப்படுவதுமாக இருக்கின்ற போதும் தமிழர் தாயகத்தில் அதன் இனஅழிப்பு பணிகள் திட்டமிட்டு தொடர் கின்றது.

இந்நிலையில் நான்காவது நாளாக இன்று ஒரு மணிக்குக் கூடிய நாடாளுமன்ற அமர்வு, எதிர்வரும் 23ஆம் திகதி “வெள்ளிக்கிழமை” வரை ஒத்திவைக்கப்படுவதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலைப் பிரதேசத்தில் கானப்பட்ட சைவ ஆலயம் அழிக்கப்பட்ட நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை இன குரோத்த்தினை தூண்டும் வகையில் பௌத்த துறவி செயல்படுவமாக முள்ளியவளைப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின்  பிரகாரம் நேற்றைய திறப்பு விழா இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலைப் பிரதேசத்தில் படையினரால் வன்வளைப்புச் செய்த இடங்களில் கானப்பட்ட சைவ ஆலயம் அழிக்கப்பட்ட நிலையில்  புத்தர் சிலை அமைத்து இன குரோதத்தினை தூண்டும் வகையில் பௌத்த துறவி செயல்படுவமாக முள்ளியவளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் சைவ ஆலயம் இருந்த இப் பிரதேசத்தினை உள்ளடக்கி இராணுவ முகாம் இயங்கியது. அந்த இராணுவ முகாமில் ஓர் பிக்கு தங்கியிருந்து சைவ ஆலயம் இயங்கிய பகுதியில் புத்தர் சிலையை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டார்.ண்டு இங்கே பகிரங்கமாக புத்தர் சிலை நிறுவ முயன்றபோது எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டபோதும் 2015, 2016 காலத்தில் அங்கே சிறிய ஆலய வடிவில் கட்டிடத்தினை பிக்கு அமைத்தார்.இந்நிலையில் தற்போது பிக்கு 6 அடி உயர புத்தர் சிலை ஒன்றினை வைத்துள்ளார்.

பொலிசார் குறித்த சிலை திறப்பினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதோடு அதற்கான ஏற்பாடுகளையும் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments