பத்மநாபாவிற்கும் சிலை!


தமிழகத்தில் வைத்து கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் முன்னாள் தலைவர் பத்மநாபாவிற்கு திருகோணமலையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தோழமை தினமான இன்று திருகோணமலை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில்; பத்மநாபாவின் சிலை நிறுவப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன் திருமலையில் தங்கியிருந்த பத்மநாபா,வரதராஜப்பெருமாள் உள்ளிட்டவர்கள் இந்தியா சென்றிருந்தனர்.

தற்போது இலங்கை திரும்பியுள்ள முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதுடன் கூட்டமைப்புடன் கூட்டு சேர முயற்சித்து வருகின்றமை தெரிந்ததே.

No comments