சீனாவுக்கு அடிபணிந்து செல்வது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது - விக்கிரமபாகு கருணாரத்ன

ஜன­நா­யக முறை­யில் நாக­ரீ­க­மான அர­சி­யலை முன்­னெ­டுத்­து­வ­ரும் ஐரோப்­பிய நாடு­க­ளு­டன் இணைந்து பய­ணிக்­காது, பொதுத் தேர்தலைக்கூட நடத்­தாது ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மான முறை­யில் சர்­வா­தி­கார ஆட் சியை முன்­னெ­டுத்­து­வ­ரும் சீனா­வுக்கு அடி­ப­ணிந்து செல்­வது மக்­கள் ஆட்­சிக்கு விரோ­த­மா­னது என்று நவ­ச­ம­ச­மாஜ கட்சியின் தலை­வர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்­தார்.

அலரி மாளி­கை­யில் நேற்­றுப் புதன்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மனித உரி­மை­கள் தொடர்­பில் எவ்­வித அக்­க­றை­யு­மின்றி ஒரு தரப்பை அதி­கா­ரத்­தில் வைத்­துக் கொள்ள அரச தலை­வர் இவ்­வாறு நடந்து கொண்­டுள்­ள­து­டன், பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு எதி­ரான கருத்­து­க­ளை­யும் முன்­வைத்து நாட்டை இருள் சூழ்ந்த யுகத்தை நோக்கி நகர்த்தி வருகிறார். ஐக்­கிய நாடு­கள் பொதுச் சபைக் கூட்­டத்­தில், பன்­னாட்டு மனித உரிமை நிய­மங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­கி­றார். இதுதான் ஜன­நா­யக ஆட்­சியா? ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அடிப்­ப­ணிந்து நடந்­து கொள்ள மாட்­டோம் என்­கி­றார்.

ஆனால், சீனா­வு­டன் அடி­ப­ணிந்து நடந்து கொள்­ள­லாமா?. கோடிக்கணக்­கில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பணத்தைபகிர்கின்­ற­னர். எவ்­வாறு அதனை மீண்­டும் பெற்­றுக்­கொள்­ளப் போகின்­ற­னர்?. ஐரோப்­பிய நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது சீனா ஜன­நா­யக அர­சி­யலை முன்­னெ­டுக்­கும் நாடு அல்ல. அங்கு எந்­த­வொரு பொது வாக்­கெ­டுப்­பும் நடை­பெ­று­வ­தில்லை. சர்­வா­தி­கா­ரத்­தில் இயங்­கும் நாட்டில் கட­னைப் பெற்­றால் நாட்­டின் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

#Vikramabahu Karunaratne

No comments