சண்டையினை நேரில் பார்க்க அனுமதியில்லையாம்?


நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளநிலையில், மக்கள் கலரிகளுக்கு செல்வதற்கு, பொதுமக்களுக்கு இன்று அனுமதியளிக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நாடாளுமன்ற சண்டைக்காட்சிகளை மக்கள் நேரடியாக பார்வையிட முடியாதென தெரியவருகின்றது.

கடந்த இரண்டு தடவைகளாக  நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல்கள் மக்களின் நேரடி பார்வைக்கு சென்றிருந்ததுடன் பெருமளவிலான சர்வதேச ராஜதந்திரிகளது பிரசன்னமும் இருந்தது.

அதிலும் ரணில் அரசுக்கு ஆதரவாகவும் மஹிந்த தரப்பிற்கு எதிராகவும் குறித்தா ராஜதந்திரிகள் செயற்படுவதுடன் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற்ற போது அவர்கள் கோசமிட்டதாகவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments