பூனை வெளியே வந்தது: ரணிலை பிரதமராக்கும் கூட்டமைப்பு!


இன்றைய நாடாளுமன்றில் ஜக்கிய தேசியக்கட்சி ரணிலை பிரதமராக்கும் யோசனையை முன்வைத்தால், அதற்கு கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் முதலில் நீக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே சபை அமர்வில் கலந்துகொள்ள மகிந்த அணியினர் தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் இன்றும் வன்முறைகள் மூளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய அமர்வின் பின்னர், வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வரக்கூடும் என கொழும்பிலுள்ள சில தூதரக தகவல்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடைய கொழும்பு அரசியல் குழப்பத்தால் உலக வங்கியினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட 150மில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா வேலைத்திட்டம் ஒன்று கிடப்பில் போடப்பட்டுள்ளதாக உலக வங்கியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியிடல் நடவடிக்கைகளை கிடப்பில் வைத்திருப்பதாக அதன் பேச்சாளர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments