கூடியது நாடாளுமன்றம்: கூட்டமைப்பினுள் குத்துப்பாடு!


இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மஹிந்த அமைச்சின் நிதி விடயங்களை முடக்கிய ரணில் தரப்பு இன்று அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான நிதியை இரத்து செய்வதற்கான பிரேரணை முன்வைத்துள்ளன.முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க அதனை முன்வைத்திருந்தார்.


இதனிடையே இன்றும் நாடாளுமன்றத்துக்கு மஹிந்த தரப்பினர் வரவில்லை.
மறுபுறம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகி டிசம்பர் 5ம் திகதி சபையை கூட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை ரணில் ஆட்சி அமைக்க கூட்டமைப்பு முன்கூட்டியே ஆதரவை வெளியிட்டமைக்கு எதிர்ப்பு கிளர்ந்துள்ளது.இது தொடர்பில் மத்திய செயற்குழுவில் ஆராயுமாறும் டெலோ பொது செயலாளர் என்.சிறிகாந்தா கோரிக்கை முன்வைத்துள்ளார்.

No comments