மட்டக்களப்பில் துப்பாக்கி சூட்டில் காவல்துறை மரணம்!


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இருந்த பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.அதில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இந்த பொலிசார் இருவர் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகிய தமிழ் பொலிஸார் இருவரே அவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் துப்பாக்கி சூட்டில் இறந்த இரு பொலீசாரில் ஒருவர் அம்பாறை பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த கணேஸ் தினேஸ்(வயது-28) என்பவராவார்

No comments