கிழக்கை சென்றடைந்த யாழ்ப்பாணத்து உதவி!


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக கிழக்கிற்கான வெள்ள நிவாரண உதவிப் பொருள்கள் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கிற்கான உறவுப்பாலம் எனும் தொனிப்பொருளில் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு யாழ் மாவட்டம் உள்ளடங்களாக நடமாடும் சேவையில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் வழங்கி வைத்துள்ளனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கி வைத்தனர்.

குறித்த நிவாரணப்பொருட்களை யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணராஜா கிருஷ்ணமீனன் தலைமையில் சென்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமான ஏற்பட்ட வெள்ளத்தினால் தமது வீடுகளில் இருந்து வெளியேறி தற்காலிகமாக தங்கியிருந்தஅம்மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

யாழ் பல்கலைக்கழக அனைத்து பீட பரீட்சைகள் மத்தியிலும் பல்கலை மாணவர்கள் வெள்ள அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களிற்கு உதவிகளை வழங்கி வைத்தமை பல தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

அது மாத்திரமன்றி குறித்த நிவாரணப்பொருட்களில் நூடுல்ஸ் பிஸ்கட் சீனி தேயிலை பால்மா கச்சான் பிஸ்கட் கல்பணிஸ் மெழுகுவர்த்தி தீப்பெட்டி சவர்க்காரம் கைக்குழந்தைகளுக்கான ஆடைகள்
மேலும் பல அத்தியாவசிய பொருள்களும் உள்ளடங்குகின்றன.


இதன் போது நன்றி கூறி கருத்து தெரிவித்த முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர் தனது கருத்தில்

எமது யாழ் பல்கலை மாணவர்கள் நேற்று (10) பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட வாகரை மக்களுக்கு நிவாரண பொருட்களை ஒரே நாளில் செய்து முடித்தமை மகிழ்ச்சியளிக்கிறது.இதற்காக இரவு பகலாக எமது முயற்சிக்கு தோள் கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

யாழ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேகரித்து இன்று (11) காலை வாகரையில் எமது பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர் குழுவும் குறித்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் மக்களுக்கு உதவுவதற்கு துணையாக இருந்தமைக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
குறித்த வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் எம்மால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையானது எமது மக்களுக்கு ஒரு உந்து சக்தியை வழங்கி இருப்பதுடன் தமிழினத்தின் அடையாளமாக வடகிழக்கு உள்ளமை தெளிவாகிறது.மேலும் அந்த அடையாளத்தின் இரு கண்களாக யாழ் பல்கலைக்கழகம் கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளதை யாவரும் அறிய வேண்டும் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். என கூறினார்.


மேலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 2010 ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி இருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments