ஈழத்தமிழர்களுக்கு நேர்மையாகவும் தூய்மையாகவும் பணியாற்றுவோம்: திருமா!


நாங்கள் அங்கு எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எமது கட்சியைப் பொறுத்தவரையில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம். ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டுமென்பதில் இன்றைய சூழ்நிலையிலும் உறுதியாக இருக்கின்றோம். என்றென்றைக்கும் ஈழத்தமிழர் மனங்களில் நாங்கள் நேர்மையாகவும் தூய்மையாகவும் பணியாற்றுவோமென தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்;று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஈழத் தமிழ் மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இக் கட்சி தமிழகத்தில் இருந்தாலும் ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டுடனேயே செயற்பட்டு வருகின்றது. 

நாங்கள் அங்கு எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எமது கட்சியைப் பொறுத்தவரையில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம். ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டுமென்பதில் இன்றைய சூழ்நிலையிலும் உறுதியாக இருக்கின்றோம். என்றென்றைக்கும் ஈழத்தமிழர் மனங்களில் நாங்கள் நேர்மையாகவும் தூய்மையாகவும் பணியாற்றுவோம். 

ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் எனும் முழக்கத்தோடு ஈழம் ஒன்றே தீர்வு என்ற கருத்திலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இன்றைக்கு அது பொருந்துவதாக இல்லாமல் இருக்கலாம். அல்லது சரியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு ஈழம் தான். 
அது 25 ஆண்டுகளுக்கு இன்னும்; தள்ளிப் போகலாம். ஆகவே இப்போது அதனை விவாதிப்பது பொருத்தமற்றது என்ற விமரச்சனமும் இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்களின் நலன்களில் விடுதலைச் சிறுத்தைகள் என்றென்றும் செயற்படுமென்றார். 

ஈழத் தமிழர்களை நாங்கள் எப்போதும் பிரித்துப் பார்த்ததில்லை. ஈழத்தமிழர்களை எமது தொப்புள்கொடி உறவு என்றல்லாமல் ஒரே குருதி உறவாகவே பார்க்கின்றோம். ஆகையினால் நாம் எல்லோரும் ஒன்று என்ற அடிப்படையில் தான் அனைத்துப் பிரச்சனைகளையும் அணுகுகின்றோம்.

நான் கடந்த காலங்களில் இங்கு வந்திருக்கின்ற நேரங்களில் அப்போது எங்கு பார்த்தாலும் இராணுவக்கெடுபிடி இருந்தது. மக்கள் எம்முடன் பேச அஞ்சினார்கள். ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கின்ற போதிலும் வலியும் துயரமும் மக்களிடமிருந்து இன்னமும் அகலவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை,காணாமல் போனோர், நில விடுவிப்பு படை ஆக்கிரமிப்பென மக்களின் வலி துயரம் அப்படியே இருக்கின்றது.இந்நிலையிலும் வேட்டுச் சத்தம் மட்டுமே இல்லை. ஆகவே ஈழத்திலுள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண தொடர்ந்தும் நாம் உறுதியுடன் செயற்படுவோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

No comments