நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மதிக்கப் பழகுங்கள் - தயாசிறி
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான தயசிறி ஜயசேகர , சுசில் பிறேமஜயந்த , எஸ்பி திசாநாயக்க ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும , இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவிக்கையில்,
நிலையியற் கட்டளை வேலைத்திட்டம் உண்டு. இந்த விடயத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அரசாங்கமொன்றின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதியை சார்ந்ததாகும். இதனை ஏற்றுக்கொள்வது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும். இந்த விடயத்தில் முதலாவதாக சபாநாயகர் இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அரசியல் யாப்பிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னெடுத்து சரியான முறையில் வாக்களிப்பு நடத்தப்படவேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை என்பது வேறொருவிடயமாகும்.
நாடாளுமன்ற பொறுப்பு குறித்து சிந்திக்கவேண்டும். நீதிமன்றம் இன்று சில பரிந்துரை தொடர்பில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் , அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டு சபாநாயகர் செயற்படவேண்டும்.
இது வரலாற்றிலிருந்து இன்றுவரை இருந்துவரும் நடைமுறையாகும். அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவாருங்கள்.
நாடாளுமன்றத்தில் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட நாடாளுமன்ற செயற்குழுவொன்று அமைக்கப்படுவது அவசியம் என்று அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் மட்டுமே உள்ளது. இது அரசியல் அமைப்புரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். இதற்கு மேலதிகமாக எவருக்காவது தேவை இருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியும். ஆனால் அத்தகைய பிரேரணை நாடாளுமன்ற நிலையியற்கட்டளைகளுக்கு அமையவே இடம்பெறவேண்டும் என்று அமைச்சர் தயசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
Post a Comment