முன்னணி என்ன செய்யப்போகின்றது? சித்தார்த்தன் கேள்வி!


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சின்னப் பையன். அவர் கதைப்பதை யாரும் சீரியசாக எடுக்கத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு தொடர்ச்சியாக மற்றவர்களை விமர்சிப்பதால் தீர்வு கிடைத்தவிடுமென்று கஜேந்திரகுமார் நினைக்கக் கூடாது. அவர் தான் என்ன செய்யப் போகின்றார் என்பதை முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்றும் சித்தார்த்தன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது வீட்டில்  நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பொன்றை சித்தார்த்தன் நடாத்தியிருந்தார். அச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் அமைப்பை வெளியேற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கnஐந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ள விடயம் தொடர்பில் ஊடகவியியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.தமிழ் மக்கள் பேரவையில் நாங்கள் உட்பட பல கட்சிகளும் பொது அமைப்புக்களும் அங்கம் வகிக்கின்றன. அதே போன்று கஜேந்திரகுமாரின் கட்சியும் அங்கம் வகிக்கின்றது. இந் நிலையில் அந்தப் பேரவையிலிருந்து எங்களை வெளியேற்றுமாறு கஜேந்திரகுமார் கோரியுள்ளதை நாங்களும் அறிந்து கொண்டிருக்கின்றோம். 

ஆனால் பேரவையிலிருந்து வெளியேறுமாறு பேரவையைச் சேர்ந்த யாரும் எமக்கு தெரிவிக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் அங்கம் வகித்துக் கொண்டே இருக்கின்றோம். பேரவையின் எழுக தமிழ் உட்பட பேரவையின் அனைத்துச் செயற்பாடுகளிலும் நாங்கள் ஆதரவு அளித்திருக்கின்றோம். எம்மைப் போன்று சுரேஸ் பிரேமச்சந்திரனின் பங்கும் அளப்பரியது.  ஆகவே பேரவை என்பது தனியே ஒரு கட்சியல்ல. அது பல கட்சிகள் பொது அமைப்புக்கள் இணைந்த கூட்டு ஆகும். ஆகவே அது ஒருவருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல.

ஆக கஜேந்திரகுமார் தான் எம்மை வெளியேற்றுமாறு கோரியிருக்கின்றார். அவர் ஒரு சின்னப் பொடியன். ஆவரின் கருத்துக்களை சீரியசாக எடுக்கத் தேவையில்லை என்று சிரித்தவாறே கூறினார். மேலும் கஜேந்திரகுமார் எம்மை வெளியேற்று என்றும் பலரையும் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்கின்ற அவர் தான் என்ன செய்யப் போகின்றார் என்பதை இன்னும் மக்களுக்கு சொல்லவில்லை. அதனை ஊடகங்களுக்கும் சொல்லியிருக்க மாட்டாரென்றே நினைக்கின்றேன்.

ஆகவே முதலில் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் தாம் எதனையுமே செய்யாமல் அல்லது தெரிவிக்காமல் மற்றயவர்களை விமர்சிப்பதனூடாக தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கலாம் அல்லது தன்னுடைய அரசியல் பயணித்தை தொடர்ந்து முன்னெடுக்கலாமென்று அவர் நினைக்கக் கூடாது. அவ்வாறு அவர் கருதுவதும் தவறு தான்.

எனவே தமிழ் மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகின்றார் என்பதே கேள்வியாக உள்ளது. அதாவது அவர் அகிம்சை ரீதியாக அல்லது ஆயுத ரீதியாகப் போராப் போகின்றாரா அல்லது இதனையெல்லாம் விடுத்து தொடர்ந்தும் தொடர்ந்தும் ஏனையவர்களை விமர்சித்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றாரா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும். 

இன்றைக்கு மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளது போன்று அவரது கட்சிக்கும் வாக்களித்திருக்கின்றனர். ஆகவே அவருக்கு வாக்களித்த மக்களுக்காவது தாம் என்ன செய்யப் போகின்றார் என்பதைப் பற்றி எதனையும் கூறாது தொடர்ந்தும் மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள். ஏன் அவ்வாறு செய்கின்றார்கள் எனக் கூறி தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றாரா.

ஆவ்வாறு தொடர்ந்தும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றார் என்றால் அது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எனவே தான் என்ன செய்யப் போகின்றார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டு அதனை அடைவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.

No comments