தளராத விக்கரமாதித்தன்:2019 தீபாவளியினுள் தீர்வென்கிறார் சம்பந்தன்

2019ஆம் ஆண்டு வரும் தீபா­வ­ளிக்­குள்­ளா­வது தமி­ழர்­க­ளுக்­கான நிரந்­தர தீர்வு பெற்­றுக் கொடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்­தன் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் கோரிக்கை விடுத்­தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்­டு­க­ளி­லும் தீபா­வ­ளிக்­குள் தீர்வு வரும், வர­வேண்­டும் என்று சம்­பந்­தன் தெரித்­தி­ருந்த நிலை­யில் இந்த ஆண்­டும் அவர் மைத்­தி­யி­டம் இந்­தக் கோரிக்­கையை விடுத்­தார்.

அரச தலை­வர் மாளி­கை­யில் நேற்று இடம்­பெற்ற தீபா­வளி தின நிகழ்­வில் உரை­யாற்­றிய சம்­பந்­தன் மேலும் தெரி­வித்­த­தா­வது
பிரிக்­கப்­ப­டாத பிள­வு­ப­டாத நாட்­டுக்­குள் தமிழ்­மக்­க­ளுக்கு நிரந்­த­ரத் தீர்வு வழங்­கப்­பட வேண்­டும், தமிழ்­மக்­கள், மொமி, கலா­சா­ரம், பண்­பாடு, பாரம்­ப­ரிய அடிப்­ப­டை­யில் சம­வு­ரி­மை­யு­டன் வாழ உரித்­து­டை­ய­வர்­கள், தந்தை செல்­வா­வு­டைய வழி­ந­டத்­த­லில் அற­வ­ழிப் பேரோாட்­டத்தை நாம் முன்­னெ­டுத்­தி­ருந்­தோம், மூன்று தசாப்த காலம் போர் இடம்­பெற்­றது, ஆனால் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு கிடைக்­கப்­பெ­ற­வில்லை, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அர­ச­த­லை­வ­ரா­கக் கொண்டு வரு­வ­தற்கு தமிழ்­மக்­க­ளின் பங்கு அளப்­ப­ரி­யது,

எனவே அவர் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வில் அவர் முக்­கிய பங்­காற்ற வேண்­டும். அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வேண்­டும், மக்­க­ளின் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும், தமிழ்­மக்­க­ளுக்­கான நிரந்­த­ரத் தீர்வு கிடைக்­கப்­பட வேண்­டும் என்று தொட­ரச்­சி­யாக ஒவ்­வொரு தீபா­வளி தினத்­தி­லும் நாம் வலி­யு­றுத்­து­கின்­றோம், ஆனால் அந்­தப் பிரச்­சி­னை­கள் தீர்க்­க­ட­வில்லை. எனவே அடுத்த தீபா­வ­ளிக்­குள் இந்­தப் பிரச்­சி­னை­கள் அனைத்­தும் தீர்க்­கப்­ப­ட­வேண்­டும் என்­றார்.

No comments