ஒருபுறம் பேரணி: மறுபுறம் தரகு வேலையில் கூட்டமைப்பு!
கொழும்பில் மஹிந்த –மைத்திரி கூட்டு கொழும்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியொன்றை நடத்திக்கொண்டிருக்கையில் ரணில் அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பு ஜேவிபி தலைமையுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
கடந்த 26ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பிரதமர் மாற்றம் ஒரு அரசியல் சதி முயற்சியென குற்றம்சாட்டியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க. சதி முயற்சி ஊடாக அரசாங்கத்ததை அமைப்பதற்கும், சதி முயற்சி ஊடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் இடமளிக்கப்படமாட்டாதென தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் இன்று மாலை இடம்பெற்ற விசேட கலரந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவித்தபோது- “எமது நாட்டில் ஜனநாயகம் மீறப்படுவதால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள்தான். விசேடமாக வடக்கு மக்கள், அரசியல்வாதிகள் என்போரே ஜனநாயகம் மீறப்படுவதால், பல இழப்புக்களைச் சந்திக்கின்றனர்.
எனவே ஜனநாயகத்துக்கு எங்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் முன்னிற்க தயாராகவுள்ளோம்.
இந்த ஜனநாயக மீறல்களுக்கு எதிராக எம்மால் ஒனறிணைய முடியுமா, ஒன்றிணைந்து கடமையாற்ற முடியுமா, ஜனநாயகத்தை பாதுகாப்பது எவ்வாறு என்பது பற்றியும், எதிர்க்கட்சிகளான நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது பற்றியும் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடினோம்.
பொதுமக்களுடன் இது குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும், இந்த அரசியல் சதியை நாடாளுமன்றத்திலும் தோற்கடிக்க நாம் ஒன்றிணைந்து செயற்படுவது என்றும் இணக்கப்பாடு காணப்பட்டது என்றார்.
இதேவேளை, இந்த சந்திப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது,“பதவி நீக்கம், புதிய பதவி நியமனம் இவையெல்லாம் அரசமைப்பு முரணான செயற்பாடுகள். இந்த செயல்கள் ஜனநாயகத்தின் இறையாண்மையை இல்லாமல் செய்கின்றது. இந்த செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இயன்றவரை இவற்றைத் தடுப்பது எமது கடமை. எம் மக்கள் சார்பாக நாம் ஆற்ற வேண்டிய கடமை. இதிலிருந்து நாம் தவறமாட்டோம். நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கொடுத்து வாங்கப்படுகின்றனர்.
இவ்விதமானச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் செயல்கள் தீவிரமடைந்தால் இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது என்பதே எமது நிலைப்பாடு“ எனத் தெரிவித்தார்.
இதனிடையே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடகிழக்கிலிருந்து தருவிக்கப்பட்ட ஆதரவாளர்கள் சகிதம் கொழும்பில் மஹிந்த –மைத்திரி கூட்டு பேரணி நடந்துள்ளது.
Post a Comment