ரணிலைப் பிரதமராக்குங்கள் - சத்தியக்கடிதாசியில் கைஒப்பமிட்டது கூட்டமைப்பு
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும், பிரதமர் செயலகத்தை ஆக்கிரமித்துள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், சத்தியக்கடதாசி இணைக்கப்பட்டு இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சத்தியக்கடிதாசியில் தாங்கள் அனைவரும் மகிந்தராஜபக்கவின் பிரதமர் பதவி நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சட்டத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகுவதற்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சட்டத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment