நீதிபதிகளுக்கு ஆணைக்குழுவால் இடமாற்றம் ?

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாகவும், பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.பி. போல், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் எம்.ஐ.எம்.ரிஷ்வி சம்மாந்துறை நீதிவானாகவும், வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஷ்வான் மட்டக்களப்பு நீதிவானாகவும், சம்மாந்துறை நீதிவான் பைசல் வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சஞ்சீவ சோமரட்ன அறிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் தொழில் நியாயச் சபையின் தலைவர் திருமதி தாரணி கணேசநாதன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தொழில் நியாயச் சபையின் தலைவராகவும், மட்டக்களப்பு தொழில் நியாயச் சபையின் தலைவர் வி.எம்.சியான் யாழ்ப்பாணம் தொழில் நியாயச் சபையின் தலைவராகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

No comments