சிறப்புத் தளபதி சூசையின் சகோதரர் சிவலிங்கம் ஐயா காலமானார்


ஈழத்தின் பிரபல கிராமியப் பாடல் முன்னோடியாக கலாபூஷணம் தில்லையம்பலம் தவராசா (சிவலிங்கம் ஐயா) திகழ்ந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இவர்
இறுதிப் போரின்போது மே 18ஆம் நாளன்று முள்ளிவாய்க்காலிலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் தலையில் உடுக்கை மட்டும் சுமந்தவாறு சரணடைந்தவர்.

சிவலிங்கம் ஐயா, ஈழத்தில் பல உடுக்கு கலைஞர்களை உருவாக்கிவைத்த பெரும் ஆளுமை என அறியப்படுகிறார்.

வல்வை முத்துமாரி அம்மன் திருவிழாவில் கிராமிய உடுக்கு பாடல்கள் பாடுவதில் மிகவும் பிரசித்திபெற்றவர்.

இதநேரம் சிலம்பாட்டம் போன்ற தற்காப்புக் கலையையும் வயது முதிர்ந்து தனது இறுதிகாலத்திலும் அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவித்துச் சென்றுள்ளார் சிவலிங்கம் ஐயா.

உண்மையிலயே சிவலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு என்றும்பேரிழப்பே.
Post a Comment