வட்டுக்கோட்டையிலிருந்து வெளிக்கிழம்பியது தேர்தல் பூதம்




நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை உயிரோடு இருக்கிறார்களோ இல்லை இறந்துவிட்டார்களோ எனத் தெரியாதவகையில் பதவிமோத்திலும் சுகபோக வாழ்விலும் திளைத்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் முன் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டனர்.

அவ்வகையில் மகளின் பிறந்தநாளுக்கு ஜனாதிபதியை அழைத்தல், எழுக தமிழ் நிகழ்வன்று சனீஸ்வரனுக்கு எள்ளெண்ணை எரிக்கச் செல்லுமாறு குழப்பியமை உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களை மேற்கொண்டதோடு மக்கள் முன் தோன்ற மறுத்துவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் வெளிக்கிளம்பி நீலிக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார்.

மக்கள் போராட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கண்டுகொள்ளாதிருந்தபோதும் மக்கள் போராட்டங்களை நடத்தினால் தீர்வு கிடைக்காது போய்விடும் என்றும் கூறிவந்த இவர்கள் இன்று சிங்கள அரசு ஏமாற்றிவிட்டது என்றும், நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகவும் கூறித்திரிந்துவிட்டு தற்போது  தமிழ் மக்கள் தங்களின் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைப்பதற்குப் பொருத்தமான தருணம் இது என்றும் அதற்கான போராட்டங்களை ஆரம்பிக்க தமிழ் மக்கள் அணிதிரளவேண்டும் தேர்தல் கடைவிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

கடந்த தேர்தலில் அருந்தவபாலனுக்குக் கிடைக்கவேண்டிய வெற்றியை தனது பத்திரிகையைக் காட்டி மிரட்டி தட்டிப்பறித்த சரவணபவனுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது  போட்டியிடும் சந்தர்ப்பம் கொடுப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை எனக் தமிழரசுக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையிலேயே தனது தொகுதியான வட்டுக்கோட்டையில் மக்கள் மத்தியில் தனக்கான ஆதரவைத் தேடி சரவணபவன் களமிறங்கியுள்ளார்.

No comments